.

Pages

Monday, December 24, 2018

சவுதி மன்னரின் விருந்தினர்களாக 203 பேர் உம்ரா நிறைவேற்றம்!

அதிரை நியூஸ்: டிச.24
8 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 203 பேர் சவுதி மன்னரின் விருந்தினர்களாக உம்ராவை நிறைவேற்றினர்.

சவுதி மன்னரின் புனித யாத்திரை விருந்தினர்கள் என்ற திட்டத்தின் கீழ் 13வது விருந்தினர் குழுவாக 8 ஆப்பரிக்க நாடுளைச் சேர்ந்த 203 பேர் உம்ராவை நிறைவேற்றியதுடன் புனித ஜூம்ஆ தொழுகையையும் புனித கஃபத்துல்லாஹ்வில் நிறைவேற்றினர்.

இந்த புனித உம்ரா யாத்திரையை மேற்கொண்டவர்கள் பொருளாதார ரீதியாக உம்ரா செய்ய சக்தியற்றவர்கள் என்பதுன் குறிப்பிட்ட ஒரு சில நாடுகளிலிருந்து  பல்வேறு சூழல்கள் காரணமாக எளிதாக பயணித்து வர இயலாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஏழை மக்களுக்கு உதவிடும் வகையிலேயே மன்னரின் புனித யாத்திரைக்கான விருந்தினர்கள் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

சவுதி மன்னரின் முழுச்செலவின் கீழ் உம்ராச் செய்துள்ள 13வது குழுவினர் எத்தியோப்பியா, செனீகல், கோமோரோஸ், டிஜிபோட்டீ, மாலி, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய 8 ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள். இந்த 13வது குழுவையும் சேர்த்து இதுவரை மொத்தம் 2,803 பேர் புனித உம்ரா கடமையை நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.