.

Pages

Tuesday, December 18, 2018

கஜா புயல் நிவாரணம் வழங்காததைக் கண்டித்து அதிரையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.18
கஜா புயலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்காததைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் அதிராம்பட்டினம் பேரூர் கிளை, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போராட்டத்திற்கு அக்கட்சியின், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் நா.காளிதாஸ் தலைமை வகித்தார். துணைச்செயலாளர்கள் எம்.எல்.ஏ ஹசன், எஸ். பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.ஆர். நாதன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடிசை வீடு, ஓட்டு வீடு, தொகுப்பு வீடுகள் அனைத்திற்கும் மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும், அனைத்து விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் அனைவர்க்கும் பாகுபாடின்றி ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு கான்கிரிட் வீடு கட்டி கொடுக்க வேண்டும், சேதமடைந்த மீனவர்களின் படுகுகள், வலைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,  மாணவர்களின் கல்வி கடன்களை ரத்து செய்ய வேண்டும், மாநில அரசு புயல் நிவாரணத்திற்கு கேட்டுள்ள நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும், நிவாரணம் கேட்டு போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முன்னதாக, இராம.குணசேகரன்(திமுக), எஸ்.கார்த்திக் (காங்கிரஸ்), எஸ்.எஸ்.பி நசுருதீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), எஸ். அகமது ஹாஜா (மனிதநேய மக்கள் கட்சி), சி.வடுகநாதன் (மதிமுக), ஆர்.கே பன்னீர் செல்வம் (விடுதலை சிறுத்தைகள்), கே. ஹாஜா முகைதீன் (இந்திய கம்யூனிஸ்ட்),  ஏ,எச் பஷீர் அகமது (இந்திய கம்யூனிஸ்ட்), எஸ். சரோஜா (இந்திய கம்யூனிஸ்ட்), சி.வைரக்கண்ணு (இந்திய கம்யூனிஸ்ட்), எஸ். பன்னீர் செல்வம் (இந்திய கம்யூனிஸ்ட்) உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

மாலையில், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஏ.எம் மார்க்ஸ் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.