அதிராம்பட்டினம், டிச.25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்கிழமை அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், தஞ்சை தெற்கு மாவட்ட மீனவரணித் தலைவர் ஏ.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கஜா புயலால் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் தென்னை விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் மற்றும் புயலில் பாதிப்படைந்த அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கவும், குடிசை வீடுகளை இழந்தவருக்கு கான்கிரிட் வீடு கட்டித்தரவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. மேலும், புயலில் பாதிப்படைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகளை சீரமைக்க துரிதமாக களப்பணியாற்றிய மின்வாரிய ஊழியர்களுக்கும், புயலில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய இஸ்லாமிய அமைப்புகளுக்கும், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டன.
முன்னதாக, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலு வரவேற்றுப் பேசினார். கூட்ட முடிவில் அதிரை பேரூர் செயலாளர் ரெத்தினம் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அதிரை பேரூர் நிர்வாகிகள் வீரப்பன், சகாதேவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.