அதிரை நியூஸ்: டிச.22
துபையில் சட்டவிரோத டேக்ஸி ஓட்டுனர்கள் அபராதம், நாடு கடத்தல் உள்ளிட்ட தண்டனைகளை சந்திக்க நேரிடும் என துபை போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
துபையில் அனுமதியில்லாத, சட்டவிரோதமாக டேக்ஸி சேவையை வழங்குபவர்கள் 20,000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர்களின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சிறை தண்டனைக்குப்பின் நாடு கடத்தப்படுவார்கள் என துபை போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
முதன்முதலாக இந்த குற்றத்தை செய்பவர்கள் 20,000 திர்ஹம் அபராதத்துடன் கள்ள டேக்ஸிக்களாக பயன்படுத்தப்பட்ட கார்களையும் இழக்க நேரிடும். இதே குற்றத்தை தொடர்ந்து 3 அல்லது 4 முறை செய்தவர்கள் கண்டிப்பாக நாடு கடத்தப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் துபை டெர்மினல் 1ல் இருந்து டெர்மினல் 3க்குச் செல்ல அனுமதிப்பெற்ற டேக்ஸிக்களில் வாங்குவதைவிட 3 மடங்கு கட்டணமும், ஒரு பிரிட்டீஷ் பெண்ணிடம் விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குச் செல்ல 500 திர்ஹம் கட்டணம் வசூலித்த புகார் வந்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி டிரைவர்கள் பிடிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.