.

Pages

Saturday, December 22, 2018

பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.22
அதிராம்பட்டினம் அருகே புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வலியுறுத்தி சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

அதிராம்பட்டினம் அருகே புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையாக நிவாரணம் வழங்காமல் பாரப்பட்சம் காட்டப்படுவதாகவும், ஒரு சிலருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டதாகவும், இதுகுறித்து முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த வட்டாட்சியர் சாந்தகுமார் மற்றும் அதிராம்பட்டினம் போலீஸார் போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இப்போராட்டம் காரணமாக அதிராம்பட்டினம் -பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.