.

Pages

Tuesday, December 25, 2018

இத்தாலியில் கி.பி 79 ம் ஆண்டு குதிரை தோண்டி எடுப்பு !

அதிரை நியூஸ்: டிச.25
இத்தாலியின் இன்றைய நேப்பில்ஸ் (Naples) நகரின் அருகேயிருந்த பண்டைய கால நகரம் போம்பே (Pompeii), இதனருகேயுள்ள வெசூவியஸ் ( Mount Vesuvius ) எனும் எரிமலை வெடித்துச் சிதறியதில் போம்பே நகரமே எரிமலை குழம்பிற்குள் முழ்கி அழிந்தது.

இந்த நகரைச் சேர்ந்த அன்றைய கால ரோம ராணுவ உயர் அதிகாரி ஒருவரின் பங்களா வீட்டையொட்டியிருந்த குதிரை லாயத்திற்குள் புதையுண்டிருந்த 'பாடம் செய்யப்பட்ட ஒரு குதிரையையும்' மேலும் 3 குதிரைகளின் சிதிலங்களையும் அகழ்வாரய்ச்சியாளர்கள் மீட்டெடுத்துள்ளனர். இந்த குதிரைகள் எரிமலை புகையில் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இதற்கு முன் புதையுண்ட மனிதர்கள், மிருகங்களின் சடலங்கள் பல மீட்டெடுக்கப்பட்டுள்ளன. நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டு, வளர்ச்சியடைந்திருந்த போம்பே நகரின் பல பகுதிகளும் அகழ்வாராய்ச்சியாளர்களால் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
  
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.