.

Pages

Wednesday, December 19, 2018

புஜைரா, திப்பா கடற்கரைக்கு நீல வண்ண மூட்டிய கடல்வாழ் நுண்ணியிரிகள்!

அதிரை நியூஸ்: டிச.19
புஜைராவுக்கு உட்பட்ட திப்பா (Dibba) நகர கடற்கரையில் இருகசை உயிரிகள் (Dinoflagellates) என அறிவியலால் அறியப்படும் கடல்வாழ் நுண்ணியிரிகள் திடீரென கூட்டமாக ஒதுங்கியதால் கடற்கரையே நீல வண்ண ஒளிவீசியது போல் ஒளிர்ந்தது.

மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாத, ஒற்றை செல் உயிரியான (Single cell organisms) இது பொதுவாக வெப்ப மண்டலம், மித வெப்ப மண்டல பிரதேச கடல்களில் காணப்படுபவை தான் என்றும் பலமுறை அமீரகம் மற்றும் வளைகுடா கடற்கரை பிரதேசங்களில் தென்பட்டுள்ளதாகவும் கடல் அறிவியலாளர், பேராசிரியர் ஆரோன் பார்த்தலோமியோவ் தெரிவித்துள்ளார்.

Most species of dinoflagellates phytoplankton are photosynthetic, and some species do produce bioluminescence (உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளி).

Bioluminescence is the production and emission of light by a living organism, which occurs due to a chemical reaction within the organism’s body. However, it is unclear why and when such organisms choose to glow.

கடற்கரையில் வைரக் கற்களை சிதறவிட்டாற்போல் நீல வண்ண ஒளிச்சேர்க்கையை படரவிட்ட இந்த நுண்ணியிரிகளின் உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால் மெல்லிய அளவில் ஒளிஉமிழ்வு நிகழ்ந்துள்ளன. இந்த நுண்ணியிரிகளை கையால் பிடிக்கவோ, குறிபார்த்து படம் பிடிக்கவோ இயலவில்லை என இதனை மொபைல் போன் வழியாக படம் பிடித்த சையது சொகைல் தெரிவிக்கின்றார். இந்த நீல ஒளிஉமிழ்வு மிகவும் கும்மிருட்டான இடத்தில் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும் தெரிவிக்கின்றார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.