.

Pages

Sunday, December 23, 2018

பட்டுக்கோட்டையில் கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில், கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளின் திட்ட இயக்குநர் ஜெகன்நாதன் தலைமையில் மாவட்ட முதன்மை அலுவலர்களுடன் கஜா புயல் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று (23.12.2018) நடைபெற்றது.

மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளின் திட்ட இயக்குநர் ஜெகன்நாதன் தெரிவித்ததாவது:
கஜா புயல் பாதித்த பகுதிகளில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணிகளை மேற்கொண்டதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மாநில அரசு தொலைநோக்கு திட்டங்களை தீட்டி வருங்காலத்தில்  தடுப்பு பணிகள் மற்றும் பேரிடர்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டி, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், கஜா புயலில் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பான நிவாரணப் பணிகளின்  தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்வதற்காக தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டவங்களுக்கும் மற்றும் திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கும் மறுசீரமைப்பு  மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ளவும், கண்காணித்திடவும் திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் திட்ட இயக்குநர் ஆகியோரை நியமித்துள்ளது. நிவாரணப் பணிகளை  விரைந்து முடித்திடவும், தொய்வின்றி நடந்திடவும் அனைத்துத் துறை அலுவலர்களும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளின் திட்ட இயக்குநர் தெரிவித்தார்.

தொடர்ந்து தற்போது வரை மேற்கொண்ட நிவாரணப்பணிகள் குறித்தும், மேலும் மேறகொள்ள வேண்டிய பணிகள் குறித்தும். மாவட்ட முதன்மை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர், மறுசீரமைப்பு  மற்றும் மறுவாழ்வு பணிகளின் திட்ட இயக்குநர் அவர்கள்  பட்டுக்கோட்டை, பேராவ10ரணி மற்றும் ஒரத்தநாடு வட்டங்களில் கொண்டிக்குளம், மல்லிப்பட்டிணம், புதுக்கோட்டை உள்ளுர், ஏனாதி, மூத்தாக்குறிச்சி, முள்ளுர்பட்டிக்காடு, வெள்ளுர் ஆகிய பகுதிகளில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள தென்னை பாதிப்புகளையும், காளகம், முள்ளுர்பட்டிக்காடு ஆகிய ஊராட்சிகளில் கஜாபுயலினால் சேதமடைந்த குடியிருப்புகளையும், ஏனாதி ஊராட்சியில் கஜா புயலினால் சேதமடைந்த கோழிப்பண்ணையினையும் நேரில் பார்வையிட்டார்.

இவ்வாய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட வன அலுவலர் குருசாமி  வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத் துறை முதன்மை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.