.

Pages

Sunday, December 23, 2018

அமீரகப் பலைவனத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் மீட்பு!

அதிரை நியூஸ்: டிச.23
அமீரகத்தின் மதீனத் ஜாயித் பலைவனத்தில் வாகன விபத்தில் சிக்கிய மூவரை மீட்ட அபுதாபி  வான்படை போலீஸ்

மதீனத் ஜாயித் எனப்படும் பலைவனப் பிரதேசத்தில் ஆசிய நாட்டவர்கள் 3 பேர் வந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் அதனை ஓட்டிவந்த டிரைவர் லேசான காயத்துடனும் மற்ற இருவரும் பலத்த காயத்துடனும் போராடுவதாக வந்த தகவலையடுத்து அபுதாபியின் வான்படை போலீஸார் மூவரையும் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு முதலுதவிக்குப் பின் மதீனத் ஜாயித் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். விபத்துக்குள்ளான கார் முற்றிலும் சேதமடைந்து விட்டது ஆனால் எவ்வாறு விபத்து ஏற்பட்டது என்பது குறித்த மேலதிகத் தகவல்கள் ஏதுமில்லை.

தகவலுக்காக...
மதீனத் ஜாயித் எனும் நகரம் அபுதாபியிலிருந்து சுமார் 170 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, இந்த நகரை 1968 ஆம் ஆண்டு உருவாக்கியவர் அமீரகத்தின் தந்தை மறைந்த ஷேக் ஜாயித் அவர்கள். இது அபுதாபி எமிரேட்டின் மேற்குப்புற மாகாணமான அல் கர்பியாவில் அமைந்துள்ளது. இதன் அருகே 'ஹப்ஷான்' இயற்கை எரிவாயு தோண்யெடுக்கப்படும் வயல் மிகவும் பிரபலமானதாகும். இந்த நகரத்தின் தென்புறம் லிவா பலைவனமும் மற்றொருபுறம் அல் கயாத்தியும் அமைந்துள்ளது.

Source: Gulf News & Wikipedia
தமிழில்: நம்ம ஊரான்
மதீனத் ஜாயித் பாலைவனத்தின் வெளிப்புற தோற்றம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.