.

Pages

Tuesday, December 25, 2018

துபையில் தங்கம் விலை ஏற்றம்!

அதிரை நியூஸ்: டிச.25
துபையில் தங்கத்தின் விலை கடந்த 6 மாதங்களில் காணப்படாத அளவிற்கு விலை ஏற்றம் கண்டுள்ளது, இன்னும் தெளிவாக சொல்வதென்றால் கடந்த 2 வாரங்களில் மட்டும் கிராமுக்கு 5 திர்ஹம் உயர்ந்துள்ளது. இது தங்க நகைகளை வாங்குவதற்கான நேரமல்ல மாறாக கையிலுள்ள இருப்பை விற்று லாபம் காணும் வாய்ப்பு என சந்தைப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தங்க விலை விற்பனை நிலவரம்:
24 காரட் 1 கிராம் 153.75 திர்ஹம்
22 காரட் 1 கிராம் 144.50 திர்ஹம்

இந்த திடீர் விலை ஏற்றத்தின் பின்னனியாக அமெரிக்காவில் நிலவும் 'ஷட்டவுன்' எனப்படும் அரசிற்கு ஏற்படும் நிதி நெருக்கடி அரசியல் சூழல், சீனாவுடன் ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர், அமெரிக்க பெடரல் வங்கி உயர்த்திய வட்டி விகிதம் போன்ற காரணிகளே தங்கம் விலை உயர்ந்ததற்கான காரணம் என கணிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.