சைக்கிளில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து சாதனை நிகழ்த்திய அதிராம்பட்டினம் இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் காதர் முகைதீன். இவரது மகன் தப்லே ஆலம் (வயது 30). விரைவாக சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை அதிராம்பட்டினத்தில் இருந்து திருச்சி, சிதம்பரம், மயிலாடுதுறை, சேத்தியாத்தோப்பு, இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று திரும்பியுள்ளார். இதுவரையில், 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், இவரது சாதனையைப் பாராட்டி அதிரை சமூக நல அறக்கட்டளை சார்பில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன், இன்று (டிச.22) சனிக்கிழமை சால்வை, பதக்கம் அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். அருகில், சமூக ஆர்வலர் அதிரை சம்சுல் ரஹ்மான் உள்ளார்.
valthukkall
ReplyDelete