.

Pages

Thursday, December 27, 2018

முத்துப்பேட்டையில் பைக்கில் இருந்து கீழே விழுந்த பெண் மீது அரசுப்பேருந்து மோதி பலி!

முத்துப்பேட்டை, டிச.27
பைக்கிலிருந்து கீழே விழுந்த பெண் மீது பின்னே வந்த அரசுப்பேருந்து மோதி பலியானார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வடசேரி ரோட்டைச் சேர்ந்தவர் சாதிக் பாட்சா. இவரது மனைவி சகிலா பானு (30). இவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் முத்துப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு இன்று வியாழக்கிழமை மதியம் சென்றுகொண்டிருந்தார். வாகனம் முத்துப்பேட்டை தனியார் பள்ளி ரயில்வே கேட் அருகே கடந்தபோது, பின்னால் அமர்ந்திருந்த சகிலா பானு திடீரென வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். அப்போது, பின்னே வந்த அரசுப்பேருந்து மோதியதில் சகிலா பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், போலீசார் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக தமுமுக ஆம்புலன்ஸில்  திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி மற்றும் படங்கள்:
முத்துப்பேட்டை சுல்தான் இப்ராஹீம் (சுனா.இனா)
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.