.

Pages

Thursday, December 27, 2018

PFI சார்பில் முதல் கட்டமாக 100 வீடுகள் புனரமைக்கும் பணி: மாநில நிர்வாகிகள் ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.27
பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் சார்பில், கஜா புயலில் பாதிப்படைந்த கூரை வீடுகள் புனரமைக்கும் பணிகளை அவ்வமைப்பின் மாநில நிர்வாகிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா (PFI), வீடுகள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, கஜா புயலில் கூரை வீடுகளை இழந்து பிற இடங்களில் வசிக்கும், தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம், மதுக்கூர், பட்டுக்கோட்டை, புதுப்பட்டினம், மல்லிபட்டினம், மரக்காவலசை, சேதுபாவாசத்திரம், உடையநாடு உள்ளிட்ட பகுதிகளில் 100 குடும்பங்கள் கண்டறியப்பட்டு, அங்கு புனரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இப்பணியினை, அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் நாகூர் மீரான், மாநில செயற்குழு உறுப்பினர் நசுருதீன், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன், செயலாளர் சேக் அஜ்மல் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

















No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.