தஞ்சாவூர் மாவட்டம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம் அருகே உள்ள முதல்சேரி, ராஜாமடம் ஆகிய பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (11.12.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிராம்பட்டினம் அருகே உள்ள முதல்சேரி ஊராட்சியில் வாழை தோப்பு, தென்னந்தோப்பு மற்றும் தேக்கு மரங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளதையும், அதனை விவசாயிகள் அரசின் மரம் அறுக்கும் இயந்திரத்தின் மூலம் அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டு, வருவாய் துறை அலுவலர்கள் முறையாக கணக்கெடுக்கும் பணி மேற்கொண்டனரா எனவும், விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார். அரசின் இழப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஓரிரு தினங்களுக்குள் வரவு வைக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
பின்னர், அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் ஊராட்சியில் கஜா புயலால் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் தொழிற்நுட்ப ஆய்வுக்கூடத்தின் மேற்கூரைகள் மற்றும் சுற்றுச்சுவர் முற்றிலும் பாதிப்படைந்ததை பார்வையிட்டு சேதங்கள் குறித்து கல்லூரி அலுவலரிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.