தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் நிவாரணப் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நிவாரணப் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகளில் பிற மாவட்ட அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், குடிசைகள் வீடுகள் பாதிப்பு, தென்னை மற்றும் வாழை மரங்கள் பாதிப்பு, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறை, வேளாண் துறை அலுவலர்கள் கணக்கெடுப்பிற்கு பிறகு கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி இரவு பகலாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் மேம்பாடு குறித்து இன்று ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைந்து முடித்து பாதிக்கப்பட்ட அனைத்து பொது மக்களுக்கும் விரைவாக நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, துணை ஆட்சியர் (பயிற்சி) ஸ்ரீதேவி, தஞ்சாவூர் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

விரைவாக இது நடந்தால் நல்ல விஷயம்...நல்லதே நடக்கட்டும்
ReplyDeleteஅன்புடன் அப்டா அன்சாரி.